உலமா கட்சி தலைவர் முபாரக் மௌலவி கூறுகிறார்
கல்முனைக்கு தமிழர்கள் மலசலகூடம் கழுவ வந்தவர்கள் என்று முகநூலில் கருத்து பதிவேற்றியது உண்மைதான் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜித் மௌலவி தெரிவித்தார்.பாண்டிருப்பை சேர்ந்த தாமோதரம் பிரதீபன் என்பவர் தமிழர்களை முகநூல் மூலமாக தொடர்ந்தேச்சையாக இழிவுபடுத்தி வருகின்ற முபாரக் அப்துல் மஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கல்முனை பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் முறைப்பாடு மேற்கொண்டு உள்ளார்.
முஸ்லிம்கள் அல்லாத ஏனைய சமயத்தவர்களையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி முபாரக் அப்துல் மஜித் முகநூலில் எழுதி வருகின்ற கருத்துகளால் இன வன்செயல்கள் வெடிக்க கூடும் என்றும் கல்முனைக்கு தமிழர்கள் மலசலகூடம் கழுவ வந்தவர்கள் என்று மிக அண்மையில் முபாரக் அப்துல் மஜித் முகநூலில் கருத்து பதிவேற்றி உள்ளார் என்றும் முறைப்பாட்டாளரான பிரதீபன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் நாம் இது தொடர்பாக முபாரக் அப்துல் மஜித் மௌலவியை தொடர்பு கொண்டு கேட்டபோது மௌலவி தெரிவித்தவை வருமாறு:-
கருத்துகளுக்கான களமாக முகநூல் விளங்குகின்றது, கருத்துக்களை கருத்துகளால் வெல்ல வேண்டும். சவூதிக்கு தமிழர்கள் தொழில் செய்ய செல்கின்றனர் என்பதற்காக அதை தமிழர்களின் நாடு என்று தமிழர்கள் உரிமை கோர முடியுமா? அது போல கல்முனைக்கு வியாபாரத்துக்கு வந்தவர்கள்தான் முஸ்லிம்கள், அதற்காக கல்முனையை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்று ஒரு தமிழ் அன்பர்
பதிவேற்றி இருந்தார்.
இதற்கு பதில் கருத்து எழுதியபோதே கல்முனைக்கு மலசலகூடம் கழுவ வந்தவர்கள்தான் தமிழர்கள், சவூதிக்கும் மலசலகூடம் கழுவவே தமிழர்கள் செல்கின்றனர் என்பதாக நான் பதிவேற்றினேன். கல்முனை முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்றபோது என்னை போன்ற முஸ்லிம் உணர்வாளர்கள் சரியான பதிலடி கொடுப்பது வழக்கமானதுதான். நாம் அறிந்த வரை அது உண்மையாக நடந்த விடயமேதான். கல்முனையில் பல தசாப்தங்களுக்கு முன் அவ்வாறு நடந்து உள்ளது.
நான் முகநூலில் வெளியிட்டு வருகின்ற கருத்துகள் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு இருப்பதாக முகநூல் மூலமாகவே அறிந்து உள்ளேன். ஆயினும் என்னை தேடி பொலிஸார் எவரும் வரவே இல்லை. அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றேன்.