காதர் மஸ்தான். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
இன்று உலகமே முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரிய அனர்த்தமான கொரோனா வைரஸுடைய பரவலானது வெகுவாக தீவிரமடைந்துள்ளது.
மருத்துவத் துறையில் மகுடம் சூடிய வல்லரசு நாடுகளே செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில்
உயிர்ச்சேதம் உள்ளிட்ட சொல்லணாத் துயரங்களுக்கு மத்தியில்
இலங்கை மக்களாகிய நாம் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் நடக்கவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளே இன்று கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபட முடியாமல் பெரும் உயிர்ச் சேதங்களையும் சொல்லணாத் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் உயிரிழப்புகள் இருபதாயிரத்தை தாண்டியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலமையில் எம்மைப் போன்ற வளர் முக நாடுகள் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும், உயிரிழப்புகள் ஏதும் இதுவரை இடம்பெறாத போதிலும் நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றியிரண்டை எட்டியுள்ளதை சாதாரணமாக எண்ணி விட முடியாது.
எதிர்வரும் இரண்டு வாரங்களும் நிச்சயமற்ற சிவப்பு வாரங்களாக சுகாதாரத்துறை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் இதனுடைய பாதிப்புக்கள் 20 000 ஆயிரத்தை எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர், உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு எனது வன்னி மக்கள் சார்பான விடயங்களை நான் தெளிவாக எடுத்து கூறியுள்ளேன்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களால் இந்த கொரோனா தொற்று தொடர்பான விடயங்களிற்கும் சிவில் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களிற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய கௌரவ பசில் ராஜபக்ச அவர்களின் நெறிப்படுத்தலில் செயலனி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலனி பொது மக்களின் நலன் கருதி சிவில், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், மருந்து பொருட்கள் விநியோகம் தொடர்பான விடயங்களை விஷேடமாக கவனிப்பதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ளனர். மருந்து பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், gas போன்றவற்றை தேவையானவர்களுக்குவீட்டுக்கே கொண்டு சென்று கொடுப்பதற்கான வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது இங்கே வரவேற்கத்தக்கதாகும்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டின் நிலமை படுமோசமாக பாதிப்படையும் அபாயத்தை நாம் ஒவ்வொருவரும் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். அரச மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு நாம் கட்டுப்படாத பட்சத்தில் அதிக உயிர்ச் சேதங்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும்.
இன்று எமது நாட்டின் சுகாதாரத்துறையினர் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இவ்வேளையில் பொது மக்களாகிய நாங்கள் நோய்த்தொற்றுக் கெதிரான மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைப்பிடிதொழுகுவதன் மூலம் இந்நோயை முற்றாக ஒழித்து விடமுடியும்.
மிக விரைவாக தொற்றக் கூடிய இக்கிருமிகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தின் நோக்கத்தை பொதுமக்கள் அறிந்து ஒன்று கூடல்களை இயன்றளவு தவிர்த்து தனிமைப்படுத்தலை கடைப்பிடித்தொழுகுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அரசாங்கம் இந்த இக்கட்டான தருணத்தில் பொது மக்களுக்கு லீசிங், வங்கிக் கடன் மின், தண்ணீர் கட்டணங்களை செலுத்தும் காலப்பகுதிகளை நீடித்துள்ளதுடன் சில உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளமைக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் வினைத்திறனான நடவடிக்கைகளையும் மனமுவர்ந்து பாராட்டுகிறேன்.
சுகாதாரத் துறையினர், முப்படையினர், பொலிஸார் ஆகியோர் தங்களது உயிரையும் துச்சமாக மதித்து இந்த நோய் தொற்று ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையும் முற்று முழுதாக பங்களிப்பினை வழங்கி ஆற்றுகின்ற சேவைகளுக்கு எனது மனமுனர்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டிருக்கின்ற செயலனியின் ஊடாக விஷேட கொடுப்பனவோ அல்லது உதவிப் பொருட்களின் பொதிகளோ வழங்கப்படுவதற்கான ஆலோசனைகள் இடம்பெறுவதாக நான் அறிகிறேன்.
எனவே எனது வன்னி வாழ் அனைத்து மக்களையும் சகல பேதங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றினைந்து இந்த தொற்றுநோய் பரவலில் இருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள பூரணமான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வடமாகாணத்தில் மதவழிபாடு ஒன்றின் போது நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைப்பதானது நாம் மேலும் கடுமையாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொள்கின்றேன்.
இறுதியாக சகல அரசியல் தலைமைத்துவங்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் அரசியல் மற்றும் ஏனைய சகல வேறுபாட்டிற்கு அப்பால் ஒரு குழுவாகச் செயற்பட வேண்டிய முக்கியமான தருணமாகும். எனவே இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒரே குழுவாகச் செயற்படுவதற்கு உங்கள் அனைவரையும் முன்வருமாறு வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடற்ற வினியோகங்களுக்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.