அத்தியாவசிய உணவு விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை .


எப்.முபாரக்-
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை கவனத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி விநியோகிக்க கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்கி இதனூடாக அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் பா.உ. இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இன்று(27)அனுப்பியுள்ள கடிதத்தில்:

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் ஆக கொழும்பு மற்றும் பிரதான நகரங்கள் இருப்பதன் காரணத்தினால் அந்த பொருட்களை உரிய பிரதேசங்களுக்கு கொண்டுவந்து விநியோகிக்க கூடிய ஒரு பொறிமுறையினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது .
மேலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரம் வித்தியாசப்படுவதின் காரணமாக போக்குவரத்து மற்றும் பொருட்களை கொண்டு வருவதில் பல தடங்கல்கள் ஏற்படலாம் .

இந்த நிலைமைகள் கவனத்தில் கொண்டு போக்குவரத்து விதிகளில் உரிய முறைகள் பெறப்படவேண்டும்.

மற்றும் வினியோகஸ்தர்கள் தங்களுடைய பொருள் கையிருப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு நாடு முழுவதற்கும் அந்த பொருள் வினியோகம் ஏற்படுவதனால் ஒரு சில பிரதேசங்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடிய வாய்ப்பும் இதனால் கூடிய விலை அதிகரிப்பு ஏற்படும் ஏற்படும்.
இதேநேரம் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அரசு முயல வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாம் பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்களுக்காக இறக்குமதியை நம்பி இருப்பதன் காரணத்தினால் துறைமுகங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக தங்குதடையின்றி கொண்டுவரக்கூடிய வழிமுறைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இது உலகளாவிய ஒரு பிரச்சினையாக இருப்பதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -