இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை மண்ணை பொறுத்தவரைக்கும் கடந்த காலங்களில் பல அரசியல் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட ஒரு பிரதேசமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டினுடைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய நேரடி தெரிவாக மயோன் முஸ்தபா அவர்களுடைய புதல்வர் காணப்படுவது குறித்து நான் பெரும் சந்தோசம் அடைகின்றேன் இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு பொது ஜன பெரமுன அரசில் எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது என்கிற வதந்திகளை பரப்பி முஸ்லிம் மக்களையும் மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கும் இடையிலான தொடர்பினை தூரமாக்குவதில் மிகவும் குறியாக முஸ்லிம் தலைவர்கள் செயற்பட்டமை யாவரும் அறிந்ததே.
இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்றைய தெரிவு அமைந்துள்ளது.
அதேபோல் களுத்துறை மாவட்டத்தில் மர்ஜான் பளீல் மற்றும் சட்ட வல்லுனர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களும் தேசிய பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷவினால் பெயரிடப்பட்டுள்ளமை முஸ்லீம் சமூகத்துக்கு கிடைத்த மற்றுமொரு பெருவெற்றியாகும்.
எனவே முஸ்லீம் சமூகம் இன்னுமின்னும் இனவாதம் பேசிக்கொண்டு சிறு கட்சிகளை நம்பி ஏமாறாமல் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தேசிய அரசியல் நீரோட்டத்ததில் அனைவரும் ஒன்றினையுங்கள்.
கல்முனை மண்ணிண் பிரச்சினைகளை நேரடியாக அறிந்தவன் என்றவகையில் கடந்த காலங்களில் சிறிய கட்சிகளின் சித்து விழையாட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளது. இவ்வாறான சந்தர்பத்தில் உங்களுக்கு கிடைத்த சிறந்த தீர்வாக மயோன் முஸ்தபாவின் வழிகாட்டலில் அவரது புதல்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரின் கரங்களை பலப்படுத்தி புதிய அரசியல் பாதையில் இணைந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் வாக்காளர்களையும் குறிப்பாக கல்முனை சாய்ந்தமருது மருதமுனை நற்பிட்டிமுனை மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
