அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் வீட்டு நிலையான தோலைபேசி மற்றும் கேபள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுதெர்ரபாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய , கொவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தகவல்களை விநியோகிப்பதை முன்னெடுப்பது அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில், அனைத்து கொடுப்பனவுகள் நுகர்வோருக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமாக கருதி இந்த சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் முன்னர் செலுத்த வேண்டிய வாடிக்கையாளருக்கான அவசர கடன் வசதி மற்றும் மேலதிக உரைiயாடல் காலத்தை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து டெலிகொம் தொலைபேசி , கையடக்க தொலைபேசி மற்றும் செய்திகளின் நேரடி தொலைபேசிகளைப் போன்று கேபல் ரீவி சேவைகளை வழங்குவோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -