ஊரடங்கு காலப்பகுதியில் காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் தீ வைப்பு பல ஏக்கர்கள் எறிந்து நாசம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பதுளை புகையிரத வீதிக்கு சமீபமாக சென்கிளையார் பகுதியில் இனந்தெரியாதவர்கள் ஊரடங்கு சட்டும் அமுலில் உள்ள காலப்பகுதியின் போது வைக்கப்பட்ட தீ காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீயினால் புகையிரத சமீஞ்ஞைகளுக்கு சேதங்கள் ஏற்படவில்லை.
இச் சம்பவம் இன்று 23 பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளம

எனினும் மேல் கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் நீருற்றுக்கள் அறியவகை தாரங்கள்.மூங்கில்கள்,சிறிய வகை உயிரினங்கள் ஆகிய அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
குறித்த காட்டுப்பகுதிக்கு மான், முயல் போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது மழை வரும் என்ற மூடநம்பிக்கை வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -