கொரோனா நோய்க்கிருமியின் பரவலைத் தொடர்ந்து அரசு விட்டிருக்கும் அவசரச் செய்தி.

கொரோனா நோய்க்கிருமியின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கத்தினால் இன்று எடுக்கப்பட்டிருக்கும் உடனடி முடிவுகள்:

1. இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களையும் மார்ச் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த வேண்டும்.

2. அதிக ஆபத்து கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவது.

3. அத்தியாவசிய சேவைகள், மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்வைச் சீர்குலைக்காமல் தொடருவதை உறுதிப்படுத்தல்.

4. போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி - பொது மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டுவோர் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுத்தல்.

5. சமூக ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் போன்றவற்றைக் குறைத்தல்.

6. தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள 300 யாத்ரீகர்களை உடனடியாகத் திரும்ப கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -