பட்டதாரிகளை உள்வாங்கி மாதாந்த சம்பளம் வழங்கும் பணி

எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் பட்டதாரிகளை இணைத்து மாதாந்த சம்பளத்தினை வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்காம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை உள்வாங்கி மாதாந்த சம்பளம் வழங்கும் வகையில் விபரங்கள் சேகரிக்கும் பணி செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், கணக்காளர் எம்ஐ.எஸ்.சஜ்சாத் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 49 பட்டாதாரிகளை ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் இணைத்துக் கொள்ளப்பட்டவுள்ளனர்.
அத்தோடு இவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவான இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -