எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பேருந்து தரிக்கும் உணவகங்கள் மற்றும் பழக்கடைகள் என்பவற்றில் விசேட பரிசோதனைகள் இன்று நடைபெற்றது.
நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பேருந்து தரித்து உணவுகளை உண்ணும் உணவகங்கள் சுகாதாரமான முறையில் உணவு மற்றும் உணவகம் உள்ளமை தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.முகைதீன் தலைமையில் இடம்பெற்ற விசேட பரிசோதனையில் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.நசீர், ஏ.ஆர்.ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுகாதார சீர்கேடான முறையில் உணவகங்களில் ஈக்கள் அதிகம் காணப்பட்டதுடன், உணவகம் அசுத்தமாக காணப்பட்டமை, பழைய பொருட்கள் பாவித்தமை, குளிர்சாதன பெட்டியில் உணவுகள் வைத்திருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றாமை, சமையல்யாளர்கள் மற்றும் வேலையாட்கள் சுகாதார உடைகளின்றி காணப்பட்டமை போன்ற பிரச்சனைகள் இணங்காணப்பட்டது.
இதில் சுகாதார சீர்கேடான முறையில் காணப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்;;கப்பட்டதுடன், மூன்று தினங்களில் மீண்டும் வருகை தந்து பரிசோதனைகள் மேற்கொள்ளும் உணவகங்கள் ஒழுங்கான முறையில் சுகாதாரத்துடன் இல்லாமல் விட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உணவகங்கள் ஒழுங்கான முறையில் சுகாதாரத்துடன் இல்லாத பட்சத்தில் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எம்.வி.எம்.முகைதீன் தெரிவித்தார்.

