ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் அறுவடை விழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மற்றும் வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் விவசாய அறுவடை விழா ஓட்டமாவடி மஜ்மா கிழக்கு சுபைர் காஜியார் தோட்டத்தில் இடம் பெற்றது.
தியாவட்டவான் விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், வாழைச்சேனை விவசாய போதனாசிரியர்களான எஸ்.சிரிகண்ணன், எச்.எம்.றியாழ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய்ஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அஸ்பர், விவசாய அமைப்பினர், கிராம மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நஞ்சற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட தும்பை உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெற்ற தும்பை அறுவடை செய்து வைக்கப்பட்டதுடன், நஞ்சற்ற முறையில் துப்பை உட்பட தோட்டப் பயிர்களை எவ்வாறு உற்பத்தி செய்வது தொடர்பில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பெரும்பாலான தோட்டப் பயிர்களை நஞ்சு கொண்ட கிருமி நாசினிகளை தெளித்து உற்பத்தி செய்வதால் தோட்டப் பயிர்கள் நஞ்சாக உற்பத்தி செய்யப்படுவதால் இதனை உண்ணும் போது பாரிய நோய்கள் ஏற்படுவதாக விவசாய திணைக்களம் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
