கண்டி மஹாயியாவா பகுதியில் பாரிய தீ- பேராபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

ண்டி பொலிஸ் பரிவுக்குட்பட்ட கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியின் அருகில் மஹாயியாவ பகுதியில் பஸ் தரப்பிடத்திற்கு பின்னால் உள்ள பகுதியில் நேற்று (31) திகதி மாலை 3.00 மணியளவில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.
கண்டி தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து, தீயினை. கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததன் காரணமாக ஏற்பட விருந்த பாரிய பேராபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது இந்த பகுதியில் காணப்பட்ட கூப்பை மேடு ஒன்று தீடீரென தீப்பற்றிக்கொண்ட வரட்சி மற்றும் காற்று காரணமாக இத்தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த தீ காரணமாக அருகில் இருந்த கடைகள்,மற்றும் வீடுகள் பாதிப்புக்குள்ளாக இருந்த நிலையினை அவமதானித்த பிரதேச வாசிகள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததனை தொடர்ந்து, பாரிய பிரயத்தனத்தின் பின் இந்த தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத் தீ எற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிய கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -