சஜீத் பிரமதாச வழங்கிய வேலைவாய்ப்பில் 2000 இளைஞா் யுவதிகள் பணி நீக்கப்பட்டனர்..!


அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தினைச் சோ்ந்த 2000 இளைஞா் யுவதிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலும் 24 மாவட்ட வீடமைப்பு அலுவலகங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளில் நியமனங்களை வழங்கியிருந்தாா். 

 இவ் ஊழியா்கள் கடந்த 1 -4 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் கடமைகளை மேற்கொண்டனா். ஒவ்வெரு 6 மாத காலத்திற்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளரினால் இவா்களது ஒப்பந்த கால்ம் நீடிக்கபபட்டு வந்தன. இவ் ஊழியா்கள் சஜித பிரேமதாசாவின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்திற்காகவும் அரசியல் நடவடிக்கைக்காகவும் இணைத்துக் கொள்ளப்பட்டவா்கள். சஜித் முன்னெடுத்த வீடமைப்புக் கடன வழங்கள் திட்டம் தற்பொழுது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நிதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
.
கடந்த டிசம்பா் 31 ஆம் திகதியுடன் இவ் ஊழியா்களது ஒப்பந்த காலம் முடிவடைந்ததை அடுத்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ பிரிவினால் இவா்களுக்கு ஏற்ற தொழில் கடமைகள் சம்பளம் இல்லாமையினால் அத்துடன் 2000 ம் வெற்றிடங்கள் இன்மையால் இவா்களது ஒப்பந்தத்தனை நீடிக்காமையால் இவ் ஊழியா்கள் தமது தொழிகளை இழக்க வேண்டி ஏற்பட்டது.

கடந்த 3 வாரங்களாக இடை நிறுத்தப்பட்ட ஊழியா்கள் காலிமுகத்திடலில் தொடா்ச்சியாக அங்கு தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் பலவந்தமாக உட்புக முற்பட்டனா் இவ் ஊழியா்கள் எதிா்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதி அதிகாரிகள் இவ் ஊழியா்கள் பிரநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்தினாா்கள் அதனை யடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமா் ஆகியோா்களுக்கு இவா்களது பிரச்சினைகளை உடன ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ் ஊழியா்களின் பிரநிதிகள் 20 பேர் நேற்று முன்தினம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் மற்றும் தேசிய வீடமைப்பு பொதுமுகாமையாளா்களுடன் வீடமைப்பு அமைச்சில் வைத்து பேச்சுவாா்த்தை நடாத்தினாா்கள்.

அதற்கமைவாக அரசின் 180 நாற்கள் தொடா்ச்சியாக 2018 மாா்ச் முன் 6 மாதங்களுக்கு முன் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அரச நிறுவனங்களில் , மற்றும் அதிகார சபைகளில் கடமையாற்றியவா்களை நிரந்தமாக்குவதற்கு நடவடிக்கையின் பேரில் தங்களையும் உள்வாங்குவதற்கு . அமைச்சா் உறுதியளித்தாா். அத்துடன உரிய சுற்றரிக்கை பொது நிறுவாக அமைச்சினால் அமைச்சுக்களுக்கு அனுப்பிய பின்னா் அதன் பிரகாரம் எதிா்வரும் ஏப்ரல் புதுவருடத்திற்கு முன் இவ் ஊழியா்களை மீள இணைத்துக் கொள்வதற்கு இராஜாங்க அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

தற்பொழுது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிலவும் வெற்றிடங்கள், மற்றும் ஏற்கனவே முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 400 பேர் கடந்த 7 வருடங்களாக தற்காலிகமாக கடமையாற்றி வருகின்றனா். சகலரையும் இணைத்து நிரந்தரமாக்குவத்கும் பணிப்பாளா் சபை, அனுமதி அமைச்சரவை அனுமதி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சா் உறுதியளித்தாா்

இங்கு கருத்து தெரிவித்த ஊழியா்கள் - முன்னாள் வீடமைப்பு அமைச்ச்ர் சஜித் பிரேமதாசாவின் காலத்திலேயே அவா் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவா் அளவுக்கு அதிகமாக ஊழியா்களை இணைத்தமை பாரிய பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் , உரிய நிர்வாக அறிவின்மை , நிரந்தரமாக்கும் நடவடிக்கை யை அவா் இழுத்தடித்தல் போன்ற பிரச்சினைகளை நாங்கள் முகம்கொடுத்தோம். 

இதுவரை அவா்கள் எங்களது பிரச்சினை சம்பந்தமாகவோ அல்லது நாங்கள் சுழற்சி முறையில் ஆர்பாட்டம் செய்யும் இடததிற்கு வந்து எங்களது பிரச்சனைகளை கேட்கவில்லை என முன் வைத்தனா். இம்முறை ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் பிரதமா் மகிந்த ராஜபக்ச அரசின் வெற்றிக்காக எதிா்காலத்தில் நாங்கள் உழைப்போம் எனவும் அவ் ஊழியா்கள் அமைச்சரிடம் தெரிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -