அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்று பேசியிருந்தார்.
இது தொடர்பில் பதில் வழங்கிய போதே பிரதமர் மகிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். மூவின மக்களுக்கும் சம உரிமையுடனான தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாக இருக்கும்.
ஏனெனில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாகி - ரணில் தலைமையில் தலைவிரித்தாடிய ஊழல், மோசடி ஆட்சியை மாற்றியமைத்ததில் சிங்கள மக்களுக்குப் பெரும் பங்குண்டு.
அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிக்கமாட்டோம். அவர்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம் என்றார்.ஐபிசி