சீனாவில் சிக்கியுள்ள மாணவர்கள் தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அவசரத் தகவல்

சீனாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் வெளியிட்ட தகவல்:

கொரனோ வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதனால் சீனாவின் ஹுனான் நகரத்தை முழுமையாக மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில், ஹுனான் நகரத்தில் தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 44 மாணவர்களையும் பாதுகாப்பாக வைப்பதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஹுனான பிராந்திய அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஹுஹான் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் தகவல்கள் தற்போது பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் சேகரித்து வருகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சீனாவில் வாழும் அனைத்து ஸ்ரீலங்கா மக்களுக்கும் வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

சீனாவில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையினால் மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். முடிந்தளவு வீட்டிற்குள் இருக்குமாறும் நோய் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெருமளவு சீனர்கள் உள்ள நிலையில், இதுவரை எந்தவொரு நபருக்கும் கொரனோ வைரஸ் தாக்கியதாக தகவல்கள் வெளியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -