பொதுஜன ஐக்கிய முன்னணி - ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியானது


- இரு தலைவர்கள் நியமிக்கப்படும்
- தவிசாளர், செயலாளர், பொருளாளர் பதவிகள் பொதுஜன பெரமுணவுக்கு
- சின்னம் மாற்றப்படும் வரை கதிரையே சின்னம்
- விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும்
ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரு தரப்பிலிருந்தும் இணைத் தலைவர்கள் ஒவ்வொருவரை நியமிக்கவும், தவிசாளர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளை ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (30) பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுக் குழு கூடி இம்முடிவை எடுத்துள்ளது.
அதற்கமைய, பொதுஜன ஐக்கிய முன்னணியை, ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என மாற்றுவதற்கும், குறித்த பதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் யாப்பை திருத்துவதற்கும்  நிறைவேற்றுக்குழு இதன்போது அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கும் வகையில் இத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணி ஆனது, ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என மாற்றப்பட்டுள்ளது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதற்கும், அதன் சின்னத்தை பின்னர் மாற்றும் வரை தற்போதுள்ள கதிரை சின்னத்தையே பயன்படுத்துவதற்கும் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -