தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலை தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.01.2020) புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லாஹ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது பெப்ரவரி மாதம் 25ம் ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கின் தீர்ப்பின் பின்னரே தேர்தல் வேட்பாளர் தீர்மானம் குறித்து சரியான முடிவு வெளியிட முடியும் என்றும் அவரின் ஆதரவு அணியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.