தன் மீது சேறு பூச வேண்டாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தம்மீது சேறு பூச சிலர் முற்பட்டு வருவதாகவும் அரசியல் இலாபங்களுக்காக ஒருவரின் அரசியல் சுயகௌரவம் அல்லது விம்பத்துக்கு சேறுபூச வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறலை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதான சில பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக என்னை கைது செய்யுமாறு மேஜர் அஜித் பிரசன்ன என்பவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு ஒன்று செய்திருந்தாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் சகோதரனான ரில்வான் எனும் பயங்கரவாதியை 2017இல் நலம் விசாரிப்பதற்காக கொழும்பு வைத்தியசாலையொன்றுக்குச் சென்றிருந்ததாகவும், அது பற்றி 2019 ஒக்டோபர் 2, 24மற்றும் 25ஆம் திகதிகளில் தனியார் தொலைக்காட்சி ஊடகச் செய்திகளில் காண்பிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் என்னை கைதுசெய்து விசாரணை செய்யுமாறும் அவர் முறைபாடு செய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும். வேண்டுமென்றே திரிபுபடுத்தி எனக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக சோடிக்கப்பட்ட ஒரு செய்தியாகும். இந்த செயற்பாடுகள் எதிர்வரும் தேர்தலை குறிவைத்து எதிர்தரப்பு அரசியல்வாதிகளால் புனையப்பட்ட தீய நோக்கங்களுடனானவையாகும்.

அது சம்பந்தமான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுப்பதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் நான் தயாரகவே உள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -