அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வும், 2020 ஆண்டுக்கான உத்தியோகத்தர்களின் கடமைச் சபத பிரகடனும் இன்று (01) வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எஸ்.எம்.முனாஸ்தீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத் தலைவர் கலாநிதி ஏ.எல்.அனீஸ், தொழிலதிபர் எஸ்.ஐ.அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதன்போது, அதிதிகள் மற்றும் முகாமையாளர் எம்.ஐ.எகியா, பிரதி முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத், வியாபார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் ஆகியோரினால் வாடிக்கையாளருக்கு புதுவருட பரில்களும், வங்கி உத்தியோகத்தர்களுக்கான புது வருட கடமைச் சபதமும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.