வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு தன்னாலான உதவிகளைச் செய்யத்தயார் -ஆளுனர் அனுராதா யஹம்பத்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,வாழைச்சேனை-
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அநூராதா யஹம்பத் வைத்தியசாலைக்கு விஜயம்

அண்மையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு ஆளணிப்பற்றாக்குறை ஏனைய விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அநூராதா யஹம்பத் அவர்களை அழைத்து வந்து வைத்தியசாலையின் தற்போதைய நிலைப்பாடுகளை எடுத்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து பணிப்பாளருமாகிய MBM.முஸம்மில் அவர்களின் முயற்சியூடாக கிழக்கு மாகாண ஆளுநர் நேற்று 28.01.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு வருகை தந்தார்.

இதன் போது, நேரடியாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு, ஆண். பெண் நோயாளர் விடுதிகள், பிரசவ விடுதி, வெளிநோயாளர் பிரிவு போன்றவற்றை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.E.ராஜபக்ஸ மற்றும் வைத்தியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர் அழைத்துச்சென்று பல்வேறு பற்றாக்குறைகள், தேவைப்பாடுகளை ஆளுநருக்கு எடுத்துரைத்தனர்.

அதன் பிற்பாடு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்தியசாலையில் நிலவும் ஆளணிக் பற்றாக்குறை தொடர்பான மல்டி மீடியா மூலம் ஆளுநருக்கு தெளிவூட்டப்பட்டது.

இதன் பிறகு கருத்துத்தெரிவித்த ஆளுநர் தன்னால் முடிந்த பல்வேறு சேவைகளை இவ்வைத்தியசாலைக்கு வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -