ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/கிண்ணியா மீராநகர் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சிறுவர் அத்திலாட்டிக் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) பாடசாலையின் அதிபர் எப்.எம்.றிஸ்வி தலைமையில் இடம் பெற்றது .
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்கள்,பதக்கங்களை அணிவித்து கௌரவிப்புக்களை வழங்கினார்கள்.
கல்வி அமைச்சினால் கடந்த 19.01.2020 அன்று கண்டி ஜெயதிலக விளையாட்டு தொகுதியில் இடம் பெற்ற குறித்த தேசிய மட்ட போட்டியிலேயே இவ்வாறு இம் மாணவர்களின் திறமை வெளிக்காட்டப்பட்டது.
இதன் போது குறித்த பாடசாலைக்கான போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட அலுவலக உபகரணங்களூம் பாடசாலை அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது
இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான எச்.தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றஜீன் மற்றும் வட்டார வேட்பாளர் ஆபிலூன் உள்ளிட்ட ஆசிரிய குழாம்கள்,மாணவர்களின் பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.