கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயில்..

ஐ. ஏ. காதிர் கான்-

ட்டுநாயக்க விமானநிலையத்தைத் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், முதற்கட்டமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இதேவேளை, விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பயணிகளின் வசதிக்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க, மத்தள, இரத்மலானை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

மத்தள சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான விசேட பேச்சுவார்த்தையொன்று, பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிகளைத் துப்புரவு செய்து ஒளியூட்டுவதற்கு, இராணுவத்தினரின் ஒத்துழைப்புப் பெறப்படும் என்றும்,விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -