பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ல வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனமானது, கடந்த 2019.06.27ஆம் திகதி 739 பேரும் 2019.08.16ஆம் திகதி 23 பேரும் மொத்தமாக 762 பேருக்கு நியமனம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்க அரசாங்க அமைச்சவையில் 811 பேருக்கு அனுமதி பெற்றிருந்தும் 762 பேருக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பல காரணங்களை எமது சங்கம் அறிந்திருந்தும்;, அதனை அப்போது வெளியிட விரும்பவில்லை. அத்தெரிவில் பல தவறுகள் இடம் பெற்றிருந்ததை நாமும் அவதானித்திருந்தோம். ஏன கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லையம் பலம் கரிஸ்ரன் தெரிவித்தார்.
இன்று (06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது

தற்போது பதவியேற்றுள்ள புதிய அமைச்சர் மற்றும் ஆளுனரை சந்திந்து, எமது நிலமைகளை விளக்கியுள்ளோம். விரைவாக தீர்வு பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுனர் கடந்த டிசம்பர் 18ம் திகதி நேரில் சந்தித்து எமது கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தின் மூலம் 762 பேருக்கான நியமனத்தில் சிங்கள ஆசிரியர்கள் 96பேரும் தமிழ் ஆசிரியர்கள் 283பேரும் முஸ்லிம் ஆசிரியர்கள் 383பேர் என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை, கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட இறுதிச்சுற்று நிருபனத்தின்படி கூறப்பட்ட '2007இற்கு முன்னர் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்' என்னும் நிபந்தனைக்கமைவாக எமது சங்கம் மூன்று கட்டங்களாகப் பிரித்து படடியல்களைத் தயாரிந்துள்ளது. அவ்விபரங்களாவன 2018இல் நேர்முக பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும் 2018இக்கு முன்னர் நடைபெற்ற நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியவர்கள் எனவும், எதுவித நேர்முகப் பரீட்சைக்கு தோற்றாதவர்கள் என வகுத்து முறையே சிங்கள ஆசிரியர்கள் 32பேரும் தமிழ் ஆசிரியர்கள் 95 பேரும் முஸ்லிம் ஆசிரியர்கள் 128 பேரும் என வகுக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நியமனத்தின் பின்னர், கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் அனைவரையும்; ஒன்று திரட்டி 06ஃ07ஃ2019இல், எமது பணியை ஆரம்பித்தது போன்று இன்றுவரை எமது முயற்சிகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம். எனது முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில்; ஜனாதிபதி தேர்தல் காராணமாக முயற்சிகள் இடையில தாமதமாகியது. தற்போது அப்பணியினை 18.12.2019 முதல் ஆரம்பித்துள்ளோம்.

தற்போது எமது முயற்சிகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால், அனைத்து தொண்டர் ஆசிரியர்களும் சோர்வடையாது அமைதி காத்து எந்தவித தவறான வழிகாட்டல்களிலும்; போராட்டங்கள் முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை கிழக்குமாகாண தொண்டராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தி. ஹரிஸ்ரன அவர்கள மேலும்; வேண்டுதல் விடுத்துள்ளார்..




.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -