அம்பாறை மாவட்டத்திற்கான அரச பொங்கல்விழா இம்முறை காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
பிரதமஅதிதிகளாக கிழக்கு மாகாண பிரதமசெயலாளர் துசித பி வணிகசிங்க மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல.பண்டாரநாயக்க ஆகியோர் கலந்துசிறப்பிக்கவிருக்கிறார்கள்.
மேலும் பல அதிதிகள் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசயெலாளர்கள் பிரதேசசபைத்தவிhளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது மூன்று கட்டங்களாக நடாத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக பாரம்பரிய உழவர்தொழிலைச்சித்தரிக்கும் தைப்பொங்கல் பவனி நந்தவனசித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கண்ணகை அம்மனாயலத்தை வந்தடையும். தொடர்ந்து இரண்டாம்கட்டமாக அதனோடு தொடர்புடைய கண்காட்சியும் அறுவடைநிகழ்வும் ஆலய கவடா வளவில் நடைபெறும்.
இறுதியாக ஸ்ரீ கண்ணகை அம்மனாலய வளாகத்தில் 101 பொங்கல் பானைகளில் பாரம்பரியமான நடைமுறைகளுடன் பொங்கிவழிபடுவதோடு சிறப்புக்கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு பல அமைப்புகள் இணை அனுசரணை வழங்குகின்றன.