கொரோனா வைரஸ் பரவும் பாதிக்கப்படும் அபாயகரமான நகரங்களின் பட்டியலில் பெங்கொக்1ம் இடம்


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் நகரிலிருந்து கடந்த மாத இறுதியில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து சீனா அரசாங்கத்தையும், மருத்துவ உலகத்தையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.

சீனாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 170 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 7,800 பேர் இந்த வைரஸின் பிடியில் சிக்கியுள்ள இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழக ( University of Southampton ) ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு நடைபெறும் விமான பயணங்களை மையப்படுத்தி ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ள 30 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவ் வைரஸ் பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள நகரங்களின் பட்டியல்
1.Bangkok
2.Hong Kong
3.Taipei
4.Seoul
5.Tokyo
6.Singapore
7.Phuket
8.Osaka
9.Kuala Lumpur
10.Macau
11.Denpasar Bali
12.Sydney
13.Chiang Mai
14.Melbourne
15.Los Angeles
16.New York
17.Dubai
18.Nha Trang
19.London
20.Ho Chi Minh City
21.Nagoya
22.Kota Kinabalu
23.Phnom Penh
24.Krabi
25.Manila
26.Siem Reap
27.Paris
28.Jakarta
29.Kaohsiung
30.Frankfurt
ஏனைய நகரங்கள் இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -