இலங்கை கிரிக்கட் சபை நடுவர்களின் நிருவாகம் மற்றும் மூதூர் UDPM நிருவாகம் மற்றும் நடுவர்களின் விசேட சந்திப்பு
Umpire Development & Panel of Mutur (UDPM) இன் அழைப்பினை ஏற்று இலங்கை கிரிகட் சபையின் (SLC) நடுவர்கள் நிருவாகக்குழு மற்றும் புள்ளிக்கணிப்பு குழு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இன்று (02) மூதூர் 3CD கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது மூதூரின் இலங்கை கிரிகட்டிற்கான தேசிய நடுவர் வை.எஸ்.எம்.ஸிஹான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கை கிரிகட் சபையின் நடுவர் நிருவாகத்தின் பொதுச்செயலாளர் வசந்தலால் பெர்னான்டோ, நடுவர்களுக்கான விரிவுரையாளரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமான டி.எச்.விஜேவர்தன, நடுவர்கள் ஒருங்கிணைப்பாளர் அபு எம்.சித்திக், DLS புள்ளிக்கணிப்பீட்டு முகாமையாளர் அசேல சன்டருவான் மற்றும் புள்ளிக்கணிப்பீட்டு நிருவகத்தலைவர் சன்ஜயஜயசிங்க , உறுப்பினர் ஜெகத்பிரேமசந்ர மற்றும் விரிவுரையாளர் ரங்கா சமந்த இவர்களுடன் அண்மையில் மூதூரில் நடுவர் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை நடுவர்கள் சங்கத்தின் (ACU - SL) நடுவர்களும் இந்த சந்திப்பில் கழந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பில் மூதூர் மற்றும் திருகோணமலையின் கிரிகட் வளர்ச்சி சம்பந்தமாகவும், மூதூர் பிராந்தியத்தின் பாடசாலைகள் மற்றும் கலகங்களின் பயிற்றுவிப்பு சம்பந்தமாகவும், நடுவர்கள் அபிவிருத்தி, பயிற்சி மற்றும் எதிர் காலத்தில் நடுவர்களுக்கான பரீட்சை சம்பந்தமாகவும் முக்கியமாக ஆராயப்பட்டன.
இலங்கை கிரிகட் சபையின் நடுவர் நிருவாகத்தின் பொதுச்செயலாளர் வசந்தலால் பெர்னான்டோ அவர்களின் உரையின்போது எதிர்காலத்தில் மூதூர் பிராந்திய நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் இலங்கை பூராக நடுவர் பணியில் ஈடுபடும் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதற்கமைவாக வரும் நாட்களில் புதிதாக சித்தியடைந்த நடுவர்களுக்கான பயிற்சிப்பட்டறை முகாம் ஒன்று நடுவர்களுக்கான விரிவுரையாளரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமான டி.எச்.விஜேவர்தன அவர்களினால் திகதி ஒதுக்கப்பட்டது.
மேலும் இலங்கை கிரிகட் சபையினால் எதிர்காலத்தில் UDPM ஊடாக பல வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த சந்திப்பில் கழந்துகொண்ட இலங்கை கிரிக்கட் சபையின் நிருவாகம் தெரிவித்தது.
இறுதியாக ACU SL நடுவரான நஹ்பீஸ் அவர்களினால் UDPM சார்பாக இலங்கை கிரிகட் சபையின் நடுவர்களின் நிறுவாகத்திற்கு நன்றி கூறப்பட்டது.