ஆதிப் அஹமட்-
இம்முறை(2019) காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி க.பொ.த. உயர்தரத்தில் வணிகப்பிரிவை கற்க விரும்பும் மானவர்வளுக்கும்,அவர்களின் பெற்றோர்களுக்குமான துறை ரீதியான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை செரோ ஸ்ரீலங்கா மாணவர் ஒன்றியம் பின்வரும் விபரப்படி ஏற்பாடு செய்துள்ளது.
காலம் – 30.12.2019,திங்கட்கிழமை
நேரம்- பி.ப. 4.00 மணி
இடம் -காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்
இந்நிகழ்வில் வணிகத்துறை ரீதியாக அனுபவமிக்க பல வளவாளர்கள் கலந்துகொண்டு வர்த்தகத்துறை ரீதியான உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விடயங்களை தெளிவுபடுத்தி ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளார்கள்.இந் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்பாக அழைக்கின்றோம்.