நெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது



கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் (29) நடுநிசி 2.00 மணியளவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்த போது, தம்மால் ஏதும் செய்ய முடியாது எனவும் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளனர்.
மிகவும் குறைந்தளவு முஸ்லிம்கள் வசிக்கும் இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
இது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -