இலங்கையில் இன்று (26) வியாழக்கிழமை ஏற்பட்ட சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை ஓட்டமாவடி - மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்றவைகள் ஏற்படும் போது அது நீங்கும் வரைக்கும் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்ற நபி மொழிக்கேட்ப குறித்த தொழுகை இன்று நடாத்தப்பட்டது.
குறித்த தொழுகையினை தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் பேஷ் இமாம் எஸ்.ஐ.நிஜாம் ஸஹ்வி நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் இடம்பெற்ற உரையினை மௌலவி எம்.முஸம்மில் ஸஹ்வி நிகழ்த்தினார்.
இத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


