மட்டக்களப்பு மாவட்டத்தில் தடாகங்களில் நன்னீர் மீன் வளர்க்கும் திட்டம் பாரிய வெற்றியளித்துள்ளது.



ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் தடாகங்களில் நன்னீர் மீன் வளர்க்கும் திட்டம் பாரிய வெற்றியளித்துள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்தில் இவ்வகை மீன்வளர்ப்புத் திட்டத்தை மேலும் விஸ்தரிக்க தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தேசித்துள்ளது.

மட்டக்களப்பு- பலாச்சோலை பிரதேசத்தில் தடாகத்தில் வளர்க்கப்பட்ட நன்னீர் மீன் முதற்கட்ட அறுவடை தற்போது நடைபெறுகிறது.

செங்கலடி பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல் மற்றும் மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு உயிர் வளத்துறை காரியாலய அதிகாரி ஜேகப் நெல்சன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
வீரபத்திரபோடி மேகநாதன் என்ற விவசாயியினால் பரீட்சார்த்தமாக அரை ஏக்கர் தடாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீன்வளர்ப்பில் முதற்கட்டமாக மூன்றரை மாதங்களில் சுமார் மூவாயிரம் கிலோ கிராம் திலாப்பியா ரக மீன்கள் பிடிக்கப்பட்;டன.

இங்கு ஆறு மாதகாலத்தில் அறுவடைசெய்ய வேண்டிய மீன்கள் அதிக வளர்ச்சியடைந்திருந்ததனால் அதன் ஒரு பகுதி மூன்றரை மாதங்களில் அவடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தடாகத்தில் சுமார் பத்தாயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
இந்த மீன் வளர்ப்பு விவசாயி அதிகாரசபை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக மீன்களுக்கான தீன்களை சுயமாக உற்பத்திசெய்து கொண்டதனால் அதிக இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த விவசாயி அதிகாரிகளினால் பாராட்டப்பட்டார். இப்பிரதேசத்தில் மீன் வளர்க்கும் போர்வையில் மணல் அகழப்படுவதாக கடந்தகாலத்தில் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று, கிரான், வாகரை, வவுணதீவு, பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அறுபது தடாகங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய பாரிய நீர்த்தேக்கங்களிலும் புளுக்குணாவ மற்றும் வெலிக்காகண்டி போன்ற 17 சிறிய குளங்களிலும் முப்பது பருவகால குளங்களிலும் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் தடாக மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் நூறு சதவீத இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியுமென ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -