அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் எதுவும் ஏற்படவில்லை


ஏ.எம்.ஜஹான்-ம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஏனைய பிரதேசங்களில் அதிகமானவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை நாம் காணக்கூடியதாவுள்ளது. இதற்கான பிரதேச மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து மக்களுக்கு சேவையாற்றும் மக்கள் சேவகன் பைசல் காசிம் எம்.பி செய்த சேவைதான் இதன்காரணம் என நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.ஜாரீஸ் தெரிவித்தார்.
ஒரு சிலரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் நிந்தவூக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என மக்கள் மத்தியில் பொய்யான கருத்துகளை பரப்பி வருவதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செய்த அபிவிருத்திக்கு சொந்தம் கொண்டாட வருகின்றவர்களுக்கு ஊடகங்களுக்கு பதிலளிற்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நிந்தவூர் மண்ணில் ஏனைய பிரதேசங்களை விட மக்களின் அடிப்படை வசதிகளை நிபர்த்தி செய்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக வீடமைப்பு திட்டம், வடிகான், வீதிகள், மக்களுக்கான வாழ்வாதாரம் குறிப்பாக சுகாதாரத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. பைசல் காசிமின் அபிவிருத்திற்கு பல தடையாக பிரதேச சபை இருந்தும் மக்களின் அடிப்படை வசதியை நிபர்த்தி செய்யத பைசல் காசிம் எம்.பி செய்த சேவையினை என்று மக்கள் மறக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இதற்கான காரணம் நமது மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின் போது நிந்தவூரில்வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களில் தேங்கியுள்ள நீரினை முறையாக அகற்ற வடிகான் திட்டம் சீராக அமைக்கப்பட்டு மத்திய வடிகானிலிருந்து வருகின்ற நீரை 4இடங்களில் திசை திருப்பப்பட்டு கடலுக்கும், வயல் பிரதேசத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றது.

2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியின் மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் கமநெகும வேலைத்திட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் 6வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய அட்டப்பள்ளம் மத்திய வீதி 18 மில்லியன் ரூபாய் செலவிலும், நிந்தவூர் தெற்கு வீதி 16 மில்லியன் ரூபாய் செலவிலும், கிட்டங்கி வீதி 18 மில்லியன் ரூபாய் செலவிலும், மீரா நகர் வீதி 18 மில்லியன் ரூபாய் செலவிலும், நிந்தவூர் 1ஆம் குறுக்கு தெரு 20 மில்லியன் ரூபாய் செலவிலும், நிந்தவூர் 2ஆம் குறுக்கு தெரு 22 மில்லியன் ரூபாய் செலவிலும் அனைத்து வீதிகளும் வடிகான்களுடன் அபிவிருத்தி செய்யப்பட்;டு மத்திய வடிகானிலிருந்து வருகின்ற நீரினை நிந்தவூர் தெற்கு வீதி, கிட்டங்கி வீதி, மீரா நகர் வீதி ஆகிய வீதிகளின் வடிகான்கள் இத்திட்டதினால் வெள்ள நீர் தேங்கிக்கிடக்காமல் வடிந்தோடுவதற்கு காரணமாக அமைந்துள்ளமை என்ற விடயத்தை இன்று யாரும் மறுக்கமுடியாது.

தெற்கு வீதியில் பிரம்பு ஆலிம் தைக்கா வீதி அமைந்துள்ள மத்திய வடிகானிலிருந்து பிரதான வடிகானிற்கு வரும் வரைக்கும் வடிகான் அமைக்கப்பட்டு அதனுடாக வயலுக்கு செல்லுகின்றது.

கிட்டங்கி வீதியில் ஜின்னா மனேஜர் சந்தியிலிருந்து பள்ள பகுதியிலுள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான வடிகான் அமைக்கப்பட்டு கடலிற்கு செல்லுகின்றது.
இதேபோல் மீரா நகர் வீதியில் வடிகான் அமைக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் முயற்சியினால் நீண்டகாலமாக இழுபறிக்கு மத்தியில் கணப்பட்ட நிந்தவூர் வைத்தியசாலை வீதி காபட் இடப்பட்டு வடிகானும் அமைக்கப்பட்டு வடிகானின் நீர் பிரதான வீதியிலுள்ள வடிகானில் இணைக்கப்பட்டது.
ஆர்.ஐ.எஸ்.டீ.பீ. வேலைத்திட்டத்தில் நிந்தவூர் தியேட்டர் வீதி அமையப்பெற்றுள்ள மலையப்பார் வட்டையிலிருந்து அச்சி மாஸ்டர் தோட்டம் வரைக்கும் கின்னிய வடிகான் 8மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
இவ்வாறு மத்திய வடிகானில் வருகின்ற நீரினை திசை திருப்பியதன் காரணமாக நிந்தவூரிலுள்ள வடிகான்களில் வெள்ள நீர்தேங்கி நிற்காமல் கடலுக்கும் வயல்வெளிக்கும் செல்வதனால் அதிகமான பிரதேசங்களின் வெள்ள அபாயம் குறைக்கப்பட்டது.
இந்த அபிவிருத்திக்கு சொந்தம் கொண்டாட வேண்டியவர் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மாத்திரம் தான் அவரை விட வேறு யாரும் இதற்கு உரிமை கோரவோ, சொந்தம் கொண்டாடவோ முடியாது அது தொடர்பான தகவல் தேவையேற்பட்டால் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பார்வையிட்டு உறுதிப்படுத்தக்கொள்ள முடியும். என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -