காந்தா சவிய" மகளிர் சக்தி ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம்


அஸீம் கிலாப்தீன்-
கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் குடும்பங்களின் துயர் போக்கும் தூய நோக்கில் செயற்படும் "காந்தா சவிய" மகளிர் சக்தி அமைப்பு இம்முறையும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களை வழங்கவுள்ளது. இந்த அமைப்பின் தலைவி பெரோசா முஸம்மில் தலைமையி ல் நடைபெறும் இந்நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (28) கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் "காந்தாசவிய" அமைப்பு வறிய மக்கள் துயர் துடைக்கும் தூய பணியை சுமார் இருபது வருடங்களாக முன்னெடுத்து வருகின்றமை, வறியோர் வாழ்வில் கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப் படுகிறது.மேலும் இவ்வமைப்பின் தலைவி பெரோசா முஸம்மில் இன,மதம் பாராது சகல இனத்தவரதும் வாழ்வுக்கு கைகொடுத்து கரம் நீட்டி வருகின்றார். எவ்வித அரசியல் நோக்கமின்றி தொண்டு நோக்குடன் செயற்படும் இவ்வமைப்பின் தலைவியின் அரசியல் வாழ்வு,எதிர்பாராத ஒரு திருப்பு முனையாகும்.

இந்த அம்மையாரின் பாரபட்சமற்ற சமூக சேவையால் கவரப்பட்ட கொழும்பு மாவட்ட மக்களின் விருப்பின் பேரிலே அவர் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் சமூகப்பணியில் இலட்சியமாகவுள்ள பெரோஸா முஸம்மில் முஸ்லிம்களின் புனித நோன்பு காலங்களில் எழை,எளிய மக்களின் ரமலான் காலத் தேவைகள், பெருநாள் தினத் தேவைகளுக்காக உணவு,உடை,மற்றும் இலவச மின்சார இணைப்பு,குழாய் நீர் வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.இது தவிர மாற்று மத சகோதரர்களின் மத வைபவங்கள்,விழாக்களுக்கும் தன்னாலான தொண்டுகளைச் செய்யும் இவ்வமைப்பில் பலர் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர்.

"காந்தா சவிய" மகளிர் சக்தி அமைப்பு ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுய தொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்களால் இன்று பல்லாயிரக் கணக்கான யுவதிகள் வருமானமீட்டுவோராக உயர்ந்து சொந்தக்காலில் குடும்பங்களை நடாத்திச் செல்கின் றமை குறிப்பிடத்தக்கது.மேலும் கணவனை இழந்து வாழ்வாதார உதவியின்றி அல்லற்படும் விதவைகள் வாழ்வில் மறுமலரச்சியை உண்டாக்கும் பணியில் கடந்த இரண்டு தசாப்த காலமாகச் செயற்பட்ட "காந்தாசவிய" அமைப்பு நூற்றுக்கணக்கான விதவைகள் வாழ்வில் நம்பிக்கையூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். குறிப்பாக வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங் களிலுள்ள பிள்ளைகளை கல்வியின்பால் ஆர்வம் காட்டச் செய்யும் பொருட்டு புலமைப்பரிசில் பாராட்டுப் பரிசில்கள்,உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகைகள் மற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகும் ஏழை மாணவர்களின் பொருளாதாரச் செலவைப் பொறுப்பெடுத்தல் போன்ற திட்டங்களும் இந்த அமைப்பால் முன்னெடுக்கப்படுகின்றன.குறிப்பாக கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தலைவியாக செயற்படும் இவரது செயற்பாடுகள் பெண்களின் கல்வியில் இவருக்குள்ள ஆர்வத்தைக் காட் டுகின்றன.தற்போது புதிய ஜனாதிபதியின் அபிவிருத்தி இலக்குகளின் பால் ஈர்க்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில், மேலும் பல நல்ல திட்டங்களை ஏழைகளின் உயர்வுக்காக முன்னெடுக்கவுள்ளமை சகலரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -