அண்மையில் பெய்த கடும்மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.12.25 ஆம் திகதி யஹ்யாகான் பௌண்டேஷனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரபீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் அவர்களது தலைமையில் சாய்ந்தமருதில் உள்ள சமூக சேவைக்கான பணிமனையில் இடம்பெற்றது.
யஹ்யாகான் பௌண்டேஷன் (யஹ்யாகான் சமூக நலன்புரி சேவைகள் மன்றம்) பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பிரதேசத்தில் வாழும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மின்சார, குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபக தலைவரான ஏ.சி. யஹியா கானினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் கணிசமான உதவிகளை செய்து வருகின்றது.
250க்கு மேற்பட்ட தேவையுடையோருக்கு உதவிகள் வழங்கப்பட்ட இன்றைய நிகழ்வின்போது அமைப்பின் பிரதிநிதிகளும் உதவிகளைப் பெறுவோரும் பங்குகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -