இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்



ரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவியேற்றுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் முன்னர் நியமிக்கப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனத்தில் இழுபறி காணப்பட்ட நிலையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் நியமனம் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -