கல்முனை கல்வி வலயம் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி 5 துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை


ல்முனை கல்வி வலயம் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி 5 துறைகளில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் துறையிலும் , நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை மாணவி முனீர் நபாத் ஆயிஸா பௌதீக விஞ்ஞான துறையிலும் , நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலை மாணவி அப்துல் அஸீஸ் நஸ்ஹத்நுஹா வர்த்தக துறையிலும் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி அப்துல் சுபியான் பாத்திமா நூஹா கலைத்துறையிலும், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி முகைதீன்பிச்சை பாத்திமா ஹனா உயிரியல் தொழில்நுட்ப துறையிலும் அம்பாறை மாவட்டத்தில் முதல் இடங்களைப் பெற்றுள்ளதாக கல்முனை வலய கல்விப் பணிப்பகாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -