அம்பாந்தோட்டை தேசிய பாடசாலைக்கு சென்ற வாகனமொன்றில் போலி வாக்குச் சீட்டு ஒருவர் கைது..

வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குறித்த வேனுக்குள் ஏறியுள்ளனர். இதன்போது வாகன சாரதி ஆசனத்துக்கு அருகில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த போலி வாக்குச்சீட்டுக்களில் எந்த அடையாளங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. வாக்குச்சீட்டின் கீழே வாக்காளர்களை அறிவுறுத்துவதற்காக என மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்ததாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக குறித்த வாக்குப்பெட்டிகள் மாற்று வாகனம் ஒன்றினூடாக வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான வாகன சாரதி திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர். குறித்த வாகனம் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதொன்று என வாகன சாரதி பொலிஸாருக்கு தெரிவித்திருக்கின்றார். அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகம் இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -