கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் இவ் வருடம் கல்வி பொது தர சாதரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு
(O/L Day) நேற்று (26) கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் பாடசாலையின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம் பெற்றது .
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் முறையீட்டு உயர் நீதிபதி திலீப் நவாஸ் மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் அவர்களும் மற்றும் கல்முனை வலயக்கல்வி அதிகாரிகள் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ,பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் , கல்விசார உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .












