ஜனநாயக வழியில் மீண்டும் எதிர் வரும் பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையினைப் பெற்று சிறுபான்மையினரின் பலத்தை காட்டுவோம் என தம்பலகாம பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் தற்போதைய தம்பலகாம பிரதேச சபை உறுப்பினருமான தாலிப் அலி தெரிவித்தார்.
தம்பலகாமத்தில் அவரது இல்லத்தில் இன்று (27) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் மைத்திரிபாலசிறிசேனவை சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளால் பெரும்பான்மை சமூகமும் இணைந்து ஜனாதிபதியாக்கினோம்
.முஸ்லிம்களை இனவாதிகளாக சிலர் காட்ட முனைகின்றனர் இம் முறை தேர்தலில் சஜீத் பிரேமதாச கோட்டபாய ஆகியோர்களுக்கிடையில் பிரதான பலத்த போட்டிகளுக்கு மத்தியில் கோத்தபாய ஜனாதிபதியானார்
அப்படி என்றால் வேட்பாளர்களாக களமிறங்கிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா,சிவாஜிலிங்கம் போன்றோர்களுக்கு வாக்களித்திருப்போம் அப்படி இல்லை இவ்வாறாக எமது சமூகத்தை வைத்து பலி தீர்த்து இனச்சாயம் பூச முனைகிறார்கள் இவ்வாறானவற்றை இல்லாமல் ஆக்கி இந்த நாட்டில் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு பங்களிப்புக்களை நல்ல நல்ல திட்டங்களுக்கு வழங்குவோம்
ஒரு ஜனநாயக நாடாக இலங்கை தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களும் இனமத பேதமற்ற எதிர்கால அரசியலில் கொண்டு செல்வதே இலக்காக காணப்படுகிறது பல்வேறு அபிவிருத்திகளை எமது கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் ஊடாக கண்டு கொண்டோம் .
முஸ்லிம்கள் அரசியலில் நிதானமாக உள்ளார்கள் எதிர்காலத்தில் சரியான முடிவுகளுடன் புதிய பிரதமரை கொண்டு பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம் அரசியலுக்காக சமூக நல்லிணக்கத்தை சீர்குழைக்க சிலர் இனவாதிகளாக தங்களை அடையாளப்படுத்துகிறார்கள் எமக்கு அவ்வாறான வழிகளில் செல்ல முடியாது இனவாதிகள் நாங்கள் அல்ல சொந்த நாட்டை தாய் போல் நேசிக்கிறோம் பெரும்பான்மை சமூகத்தை அரவணைத்து செல்லவே எங்களது விருப்பமாக உள்ளது என்றார்.