நாளை நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதிதேர்தலில் வாக்களிப்புதற்கு தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டைகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் நேற்று வழங்கிவைத்தனர்.
அந்தந்த மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இந்த வாக்காளரின் தற்காலிக அடையாள அட்டைகளை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பிரதேச செயலாளர்கள் குறித்த வாக்காளர்கள் வதியும் கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 750 பேருக்கு இத்தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இது அவசர அரசபணியாதலால் நேற்று பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவற்றை கிராமசேவையாளாரின் அலுவலகங்களுக்குச்சென்று வழங்கிவைத்தார்.
கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் உதவிதேர்தல் ஆணையாளரின் ஒப்பத்துடன்கூடிய குறித்தவாக்காளரின்படத்துடன் இவ்அடையாள அட்டைகளைக்காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையகம்அறிவித்திருந்தமை தெரிந்ததே.