எஸ்.பி.திசாநாயக்க சென்ற வாகனத்தினை வழிமறித்தவர்களுக்கு பாதுகாப்பு பிரிவினரால் துப்பாக்கிச் சூடு இருவர் காயம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் நேற்று (06) இரவு 7.30 மணியளிவில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க சென்ற வாகனத்தினை வழி மறித்தவர்கள். துப்பாக்கிச் சூடு மேல் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் காயங்களுக்கு உள்ளாகி கித்துல்கல தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது கலுகல பகுதியில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் கலந்து கொண்டு; வந்த சிலர் தாங்கள் சென்ற வேனினை குறுக்கே நிறுத்தி எஸ்.பி.திசாநாயக்க சென்ற வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருசாராருக்மிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும,; அதனை தொடர்ந்தே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் பாதுகாப்பு கருதி நிலத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர.; இந்த துப்பாக்கி ரவைகள் கல்லில் பட்டு இருவரின் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கரவநெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மற்றய நபர் விசாரணைக்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை; கினிகத் துனை பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜி.எஸ்.கருதாச தலைமையில் விசேட பொலிஸ் குழு ஒன்றின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக எஸ் பி.திசாநாயக்கவின் பாது உத்தியோகஸ்த்தர்களை வாக்கு மூலம் அழிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -