இன்று அம்பாறையில் 523 வாக்களிப்பு நிலையங்களுக்கான சிற்றறைகள்வழங்கிவைப்பு!


காரைதீவு  சகா-

ம்பாறை மாவட்டத்தில் 523வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிக்கும் சிற்றறைகள்(வாக்களிப்பதற்கான மறைவிடம்) (14) வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமசேவைஉத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் நேரடியாகச்சென்று வழங்கிவைத்தார்.
இங்கு கோமாரி கிராமசேவை உத்தியோகத்தருக்கு அச்சிற்றறைகள் வழங்கிவைக்கப்பட்டன.

வழமையாக இச்சிற்றறைகள் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலரிடம் முதல்நாள் வழங்கிவைக்கப்படுவது வழமை.
ஆனால் இம்முறை அவை அந்தந்த பிரதேசசெயலகத்தினூடாக பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் வழங்கிவைக்கப்படுகிறது.

அவர்கள்வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும்போது இச்சிற்றறைகளையும் வைத்து தயார்நிலையில் வைப்பார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -