முஸ்லிம்களாகிய நாம் நமது அன்றாட வாழ்வின் அனைத்து விடயங்களிலும் நம் மார்க்க கடமைகளை பேணி நடப்பதுடன் மட்டுமில்லாது அதன் மூலம் கிடைக்கும் நன்மையினையும் நினைத்து சந்தேசப்பட்டுக் கொள்கிறோம்.
ஆனால் தேர்தல் & வாக்குரிமை என்று வரும்போது மட்டும் தட்டுத்தடுமாறி தங்களுடைய வாக்குரிமையின் பெறுமானம் மார்க்கக் கடமை என்ன என்பதை மறந்து நிலையில் நாம் சில முடிவுகளை எடுக்கின்றோம்.
அது சிலநேரம் தவறாகவும் அல்லது சில நேரம் சரியாகவும் இருந்தாலும் முஸ்லிம் என்ற பண்பில் இருந்து நாம் அதனை பார்க்கவேண்டும். வாக்களிப்பு என்பது சாட்சியம் கூறுவதாகும்.
ஆகவே நாம் அளிக்கின்ற வாக்கு என்பது நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் இருக்க வேண்டும்.
ஆகவே எமது ஜனநாயக வாக்கின் பெறுமானத்தையும் அதனைபயன்படுத்துவதற்கான முழு நோக்கத்தையும் ஒரு முஸ்லிமின் கடமையாக உணர்ந்து நாம், நீதி ,நேர்மை, நம்பிக்கை மக்கள் நலன் நாட்டின் பாதுகாப்பு இறையாண்மை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்துவதாக நீங்கள் கருதும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
மாறாக தங்களுடைய சுய நலனுக்காகவும் ஓரிரு நாட்களில் கிடைக்கும் அற்ப நன்மைக்காகவும் ( பணம் உட்பட) ஏனைய இதர காரணங்களுக்காகவும் வாக்குகளை தவறானவர்களுக்கு வழங்கி எம் தீர்மானங்களை அல்லது சாட்சியை அளிப்பதன் மூலம் நாமும் துன்பங்களை அனுபவிப்பதுடன் நாட்டின் எதிர்கால சந்ததியும் அந்தத் துன்பத்தில் பங்கு கொள்வதற்கு ஒருபோதும் நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது.
ஆகவே நாம் எடுக்கின்ற தீர்மானம் அல்லது சாட்சி கூறுதல் என்பது நீதியாகவும் நியாயமானதாகவும் மக்களுக்கு அமையப்போகும் ஆட்சியில் நன்மை பயக்கக் கூடியதாகும் மக்களின் எதிர் கால நலனில் நன்மையாகவும் அமைய வேண்டும்.
நாம் நமது மார்க்க கடமைகளில் செய்யும் போது எவ்வளவு கவனமும் நிதானமும் தெளிவும் எடுத்துக் கொள்கிறேமோ அதுபோல் சாட்சி கூறுவதும் ஒரு மார்க்க கடமையாக உணர்ந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியம்.
எனவே ஜனநாயக உரிமையான வாக்கினை நாம் ஒரு முஸ்லிமின் கடமையில் இருந்து செலுத்தி அதற்கான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக் கொள்வதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் ஈர் உலக எதிர்பார்ப்பாகும் என்ற உன்மையை புரிந்து நம் வாக்கினை அளித்து நீதியின் பால் நிலைத்து நிற்க வேண்டும்.
எனவே கால நேரத்துடன் நாளை 16-11-2019 வாக்குச் சாவடிக்கு சென்று சுதந்திரமாக நீங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு உங்கள் வாக்கினை வழங்கி ஜனநாயகத்தில் ஒரு விரல் புரட்சியை நீங்களும் செய்யுங்கள்
"நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற உன்னதாமான பனியை சுமந்தவர்கள் நாம்"
நன்றி
- நஸ்ப் லங்கா -
"சமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு"