எல்பிட்டிய தேர்தல் - ஆணைக்குழுவின் தலைவர் கருத்து


ல்பிட்டிய பிரதேச சபைக்கு உட்பட்ட மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புக்களை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலும் அமைதியான முறையில் நடைபெறவேண்டும். சட்டம் முறையாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எல்பிட்டிய மக்கள் தேர்தலுக்காக சண்டை போடுபவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்குகள் இன்று மாலை 4.00 மணிக்கு பின்னர் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து தேர்தல் பெறுபேறுகள் காலி தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடாக அறிவிக்கப்படும்.
மேலும் வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -