போலி முகவர் நிலையம் நடாத்திய முதியோர் ஒருவருக்கு ஒரு வருட சிறை தண்டனை கந்தளாய் நீதிமன்றம் தீர்ப்பு


வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியக முகவருக்குத் தெரியாமல் கந்தளாய் முள்ளிப் பொத்தானையில் பகுதியில் போலி முகவர் நிலையம ஒன்றை நடாத்தி வந்த முதியோர் ஒருவருக்கு இன்று (15) கந்தளாய் நீதி மன்றம் குற்றவளியாக கண்டதுடன்,
இவருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டாப் பணமும் , 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கிமுள்ளது.
திருகோணமலை முள்ளிப் பொத்தானை பகுதியைச் சேர்ந்த நூர் முகம்மது நசூர்தீன் வயது -62) முதியார்
ஒருவருக்கே இவ்வாறான தண்டனை வழக்கப் பட்டுள்ளது.
கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி , திசானி தேன பது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இவர் கந்தளாய் , முள்ளிப் பொத்தனை பகுதியில் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியக முகவர்களுக்கு தெரியாமல் போலி முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்துள்ளதாகவும் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியக விசேட புலனாய்வு பிரிவினரான என்.யோகேஷ்வரன் மற்றும் திசா நாயக்க , விபுல திசநாயக்க , என்பவர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மிக நீண்ட காலமாக இவ் வழக்கு விசாரணை இடம் பெற்று வந்துள்ளதோடு இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
இவர் இது போன்ற ஒரு குற்றம் ஒன்றை ஏற்கனவே நீர் கொழும்பு பகுதியிலும் குற்றம் புரிந்துள்ளதையும் இந்த நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -