மாணவர் பாராளுமன்ற தேர்தல்

அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று ( 3 ) பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும் பிரதி அதிபர்களின் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர் எஸ் உதயலிங்கம் அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர் பாராளுமன்ற தேர்தல் குழுவின் பங்கேற்றலுடன் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் ஜனநாயகம் , அதன் பொறுப்புக்களும் வகை கூறுதலும் என்பன பற்றியும் சட்டத்தின் ஆதிபத்தியம் , வாக்கு , வாக்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஆகியன பற்றிய செய்முறை அறிவைப் பெறுவதற்குரிய வழிகளைத் திறந்துஉரையாடல் , இணக்கப்பாடு , ஏனையோரின் கருத்துக்களுக்கு செவிமடுத்தல் மற்றும் பெரும்பாலானோரின் இணக்கப்பாட்டை ஏற்றுக் கொள்ளல் போன்ற திறமைகளையும் மனப்பாங்குகளையும் பாடசாலை மட்டத்திலிருந்து வழங்கும் நோக்கில் கல்வியமைச்சு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளலும் ” மாணவர் பாராளுமன்றங்களை அமைத்து அதனை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -