விலை மதிக்க முடியாத சொத்து சிறுவர்கள்.-ஏ.ஜே.எம் முஸம்மில்

வ்வுலகில் விலை மதிக்க முடியாத சொத்தான எமது சிறுவர்களை, சரியான முறையில் வழிநடத்தி சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (17) , கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேல் மாகாண தலைமைச் செயலாளர் பிரதீப் யசரத்ன, சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் எசல வீரகோன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்: “ குழந்தைகள் தான் மதிப்புமிக்க சொத்து, அவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி, அவர்கள் வளர தேவையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.”
அதேவேளைச் சிறுவர்களை ஊக்குவிக்க பல்வேறு துறைகளில், பல்வேறு அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் சேவைகளையும் இதன்போது ஆளுநர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -