ஆழ்துளை கிணறுகுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆள்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த 18 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் 26 அடி ஆழத்தில் வீழ்ந்த குழந்தை 80 அடி ஆழத்துக்கு சென்றுள்ளமையினால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் மண் சரிந்து வீழ்ந்துள்ளாதாாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தையை மீட்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறு இருந்தாலும் அப்பாவிக் குழந்தை உயிருடன் மீட்கப்படவேண்டும் பிரார்த்திப்போம்.