கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம்,மேலங்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் தி/கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பாடசாலை உதைப் பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று ( 21) காலை பாடசாலை வளாகத்தில் வைத்து பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.சலீம் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
18,20 வயதின் கீழ் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் பிரதியமைச்சரால் வழங்கப்பட்டன.
இதன் போது மாணவர்களுக்கான காலை ஆராதனையின் ஒரு பகுதியாக ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்களிடம் பிரதியமைச்சர் பகிர்ந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி மற்றும் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -