சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்தர சர்வதேச சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தமைக்காக எட்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கான பல்கலைக்கழக மூதவையினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் உயர்தர ஆய்வுகளில் ஈடுபடவும் அவ் ஆய்வு முடிவுகளை தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் வெளியிடுவதனூடாக அறிவைப் பரப்புவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் ' உயர்தர வெளியீடுகளுக்கான மூதவை விருது' (ளுநயெவந யுறயசன கழச ர்iபா ஐஅpயஉவ Pரடிடiஉயவழைளெ) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆய்வு மற்றும் வெளியீட்டு மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் திருமதி எப்.ஹன்சியா அப்துல் ரஊப் தலைமையில் பல்கலைக்கழக மூதவை கேட்போர் மண்டபத்தில் ( 23 ) நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்து கொண்டு விருதுக்கான சான்றிதழ் களை வழங்கி வைத்தார்.
இதற்கமைவாக சர்வதேச சிறந்த உயர் தரத்திலான ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைக்கு முதலாவது முறையாக சமர்ப்பித்த கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், முகாமைத்துவ மற்றும்; வர்த்தக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.குனபாலன், இரண்டாவது முறை சமர்ப்பித்த முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.முஸ்தபா, தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளர் கலாநிதி முனீப் எம். முஸ்தபா, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம்.ஹாறூன், இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த முகாமைத்துவ மற்றும்; வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால், முகாமைத்துவ மற்றும்; வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சப்ராஸ் நவாஸ் ஆகியோர்களே தெரிவு செய்யப்பட்டு இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் , பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் உட்பட மூதவை உறுப்பினர்கள் பீடாதிபதிகள், பகுதித் தலைவர்கள் சிரேஷ்ட உதவிப் பத்pவாளர் திருமதி பாரிஸா ஹஸன், உதவிப் பதிவாளர் வீ.முகுந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.