அல் பக்தாதி ஓர் யூதர் என்றால் அவரை ஏன் அமெரிக்கா கொல்ல வேண்டும் ? ரஷ்யாவின் அறிவிப்பில் உள்ள குழப்பம்.


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுகின்ற ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல்களையடுத்து வடமேற்கு சிரியாவில் பக்தாதியின் மறைவிடத்தை நோக்கி அமெரிக்காவின் ஹெலிகொப்டர்களும், விமானங்களும் வான்வளி தாக்குதல் நடாத்தியது.

விமானத்தாக்குதலில் இருந்து அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது அப்பிரதேசத்தை அமெரிக்க தரைப்படைகள் சுற்றிவளைத்ததாகவும், அதனால் தப்பிச்செல்ல முடியாமல் வேறு வழியின்றி தனது உடலில் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஐ.எஸ் இயக்கம் என்பது அமெரிக்காவினதும் யூதர்களினதும் செல்லப்பிள்ளை என்றும், அல் பக்தாதி ஒரு யூதர் என்றெல்லாம் கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் மூலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஒசாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்டபின்பு அல்கொய்தா இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்களில் ஒருவராக இருந்த ஈராக்கை சேர்ந்த அபூபக்கர் அல் பக்தாதி அவர்கள் ஐ.எஸ் இயக்கத்தை ஆரம்பித்து ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளுக்கு எதிராக போர் தொடுத்தார்.
அந்தப்போரில் வெற்றிபெற்று ஈராக்கினதும் சிரியாவினதும் பெரும் நிலப்பரப்புக்ககளை கைப்பேற்றி ஆட்சி செய்ததுடன், தன்னை இஸ்லாமிய உலகின் ஹலீபாவாக அறிவிப்பு செய்தார்.
பக்தாதியின் இந்த அறிவிப்பு உலக இஸ்லாமிய மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மன்னராட்சி நிலவுகின்ற சவூதி போன்ற நாடுகளில் இளைஞ்சர்கள் வீதியில் இறங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
ஐ.எஸ் இயக்கத்துக்கு உலக மக்கள் மத்தியில் கிடைக்கப்பெற்ற இந்த வரவேற்பினால் மன்னராட்சி செய்துவருகின்ற நாடுகளில் உள்ள அரச குடும்பத்தினர்களுக்கு அச்சத்தினையும் பீதியையும் ஏற்படுத்தியது.

இதனால் இஸ்லாமியர்களின் மனதிலிருந்து ஐ.எஸ் இயக்கத்தினர்கள் மீது வெறுப்பை உண்டுபண்ணும் நோக்கில் பக்தாதியை ஓர் யூதர் என்று பிரச்சாரப்படுத்தி வந்தபோது ஐ.எஸ் இயக்கத்தின் கடும்போக்கு நடவடிக்கைகள் மன்னர் குடும்பத்தினர்களுக்கு சாதகமாக அமைந்தது.

அதாவது ஐ.எஸ் இயக்கத்தினர்கள் இரக்கமின்றி தண்டனை வழங்குகின்ற கொடூரமான காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் மூலமாக மிகைப்படுத்தி அவர்களை ஓர் கொடூரமானவர்களாகவும், இஸ்லாத்துக்கு எதிரானவர்களாகவும், யூதர்களாகவும் சித்தரிக்கப்பட்டார்கள்.

பின்பு ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்துவந்த ஆதரவு சரியத்தொடங்கியது.
இதனால் மன்னர் குடும்பங்கள் நின்மதி அடைந்ததுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் மகிழ்ச்சி அடைந்தன.

தற்போது அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அதிலும் சில குழப்பங்கள் காணப்படுகின்றது.

அதாவது இந்த இராணுவ நடவடிக்கைக்கு செல்லும்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து சென்றதாகவும் அதற்காக அனுமதி வழங்கிய ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் தாங்கள் வழங்கவில்லை என்றும், அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென்று ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கருத்தினை ரஷ்யா மருத்துள்ளதாலும், கடந்த காலங்களிலும் பக்தாதி கொல்லப்பட்டார் என்று பல தடவைகள் அமெரிக்கா அறிவிப்பு செய்ததுமேதான் இந்த குழப்பத்துக்கு காரணமாகும்.

இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதியே நேரடியாக பக்தாதியின் மரணத்தை உறுதிப்படுத்தும்போது அதனை நாங்கள் மறுதலிக்க முடியாது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -