இடம்பெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் காத்தான்குடி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் காத்தான்குடி பிரதேச அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் நேற்று(08) இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் கள நிலவரங்கள்,எதிர்கால பிரச்சார செயற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலானா,இணைப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் ஸயீத் உற்பட கட்சியின் காத்தான்குடி, பாலமுனை,காங்கேயானோடை,பூநொச்சிமுனை மற்றும் மஞ்சந்தோடுவாய் முக்கியஸ்தர்கள்,வட்டார அமைப்பாளர்கள்,இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.